புதன், 20 பிப்ரவரி, 2008

என் அன்புக்குரிய ஆள்



சில் என்ற நடை உடையாள் - உயர்
சிந்தனை தெளிவுடையாள்
கொல்கின்ற விழி அதனில் பல
கோலங்கள் காட்டிடுவாள்

அன்பிலே பெரும் கடலாள் - முக
அழகிலே நறும் முகையாள்
பண்பிலே உயர்திடுவாள்- சிறு
கனவையும் பறிதிடுவாள்

இடையிலே சிறுத்திடுவாள் என்
இதயத்தில் இடம் பிடித்தாள் -புழக்
கடையிலே சிரித்திடுவாள் வரும்
கனவையும் பறித்திடுவாள்

குரலிலே அவள் ஒரு யாழ் - அரும்
குணத்திலே அவள் இனிப்பாள்
அரவிலே சேஷனைப் போல் என்
அன்பிலே அவள் பெரிய ஆள் !

(சஞ்சீவி 20.12.1997)


4 கருத்துகள்:

பனிப்பொழில் சொன்னது…

who is she? your would be?

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

This is the poem I wrote before falling in to love.

பனிப்பொழில் சொன்னது…

யாழ்ப்பாண வாசனையடிப்பதொன்றே போதும் உங்கள் கவிதைகள் தமிழர்களின் இதயங்களைக் கவர்வதற்கு. நடைமுறை வாழ்வோடு நெருங்கிச் சென்று எண்ணங்களைப் பதிவு செய்ய மிகச் சிலரால் மட்டுமே முடியும். அதை நீங்கள் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

பனிப்பொழில் சொன்னது…

எங்கள் யாழின் இசை இன்னும் எத்தனை காலம் முஹாரியையே மீட்டிக்கிடக்கும் என்று எண்ணுகையில் ஏக்கம் வெம்பி வெடித்து வேறு பாதை பார்க்கிறது. யதார்த்தங்களைப் பதிவு செய்கிற உங்கள் பெருமளவிலான ஆக்கங்கள் பலபேரின் தடுமாற்றப் பாதையை, மாற்றிவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். பதியுங்கள். காலத்தை பார்க்கலாம்.